முழுப்பெயர் : Mithali Dorai raj
பிறப்பு : 3 டிசம்பர் 1982 ,ஜோத்பூர்
முதல் டெஸ்ட் போட்டி : 14.1.2002 (இங்கிலாந்துக்கு எதிராக )
முதல் ஒரு நாள் போட்டி : 26.6.1999 (அயர்லாந்துக்கு எதிராக )
T 20 போட்டி : 5.8.2006 (இங்கிலாந்துக்கு எதிராக )
- மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை.
- ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக 7 அரை சத்தங்களை விளாசிய வீராங்கனை.
- ஒரு நாள் போட்டியில் அதிக அரை சதங்களை விளாசிய வீராங்கனை .
- ஒட்டு மொத்தமாக சர்வதேச T 20 போட்டியில் ரோஹித் சர்மா,விராட் கோலி இவர்களை விட அதிக ரன் எடுத்தவர்.
- இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என அழைக்கப்படுபவர்.
- 1999-ல் அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தான் அவரது முதல் சர்வதேச ஆட்டம்.
- முதல் போட்டியில் 114 ரன்கள் விளாசி மகளிர் கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தவர்.
- அந்த போட்டியில் மிதாலியும் மற்றொரு அறிமுக வீராங்கனையான ரேஷ்மா காந்தியும் தொடக்க ஆட்டக்காரர்களாக இருந்தனர் .
- இந்த போட்டியில் இருவருமே சதம் அடித்தனர்
- ஆனால் மித்தாலிக்கு முன்பாக ரேஷ்மா சத்தம் அடித்ததால் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த பெருமையை ரேஷ்மா பெற்றார்.மிதாலி 2வது வீராங்கனை என்ற சிறப்பு தான் பெற்றார்.
- இதே போல் 2002-ல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார்.
- முதல் டெஸ்ட் போட்டியில் ரன் எடுக்காமல் அவுட் ஆனார்.
- மூன்றாவது போட்டியிலேயே 214 ரன்கள் எடுத்தார் .
- 198 ஒரு நாள் போட்டியில் விளையாடி 6550 ரன்கள் எடுத்திருக்கிறார்.
- இதில் 7 சதங்கள் ,51 அரை சதங்கள் பேட்டிங் சராசரி 51,உலக அளவில் எந்த வீராங்கணையுமே 6 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை இதுவரை தொட்டதில்லை. 2017 -ல் அந்த சாதனையை படைத்த முதல் வீராங்கனையானார் .
- 2006 முதல் T 20 போட்டியில் விளையாடி வருகிறார்.
- சுமார் 19 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் நீடித்து வருகிறார்.
- 2013-ல் மத்திய அரசு அர்ஜுனன் விருதையும்,
- 2015-ல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கவுரவித்தது.
To join our WhatsApp group click here
To view the Newspaper current affairs 2.12.2018 Click here
Subscribe the Telegram channel click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment