(TNPSC சம்பந்தமாக /மெயின் சம்பந்தமாக அல்லது வேறு ஏதேனும் தகவல்களாக இருந்தாலும் அதனை பற்றிய தகவல் தேவைப்பட்டால் COMMENT செய்யவும்.உங்களுக்கு அதன் பற்றிய விரிவான தகவல்கள் எங்களது தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். )
- டிசம்பர் 30,2002 : போர் விமானங்களை வாங்குவதற்கான கொள்முதல் நடைமுறைகளுக்கு பாதுகாப்புத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
- ஆகஸ்ட் 28,2007 : விமானப்படைக்கு 126 அதிநவீன போர்விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவை பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டது
- மே 2011 : இந்திய விமானப்படை தெரிவித்தத விருப்ப பட்டியலில் ரஃபேல் மற்றும் யூரோபைட்டா விமானங்களின் பெயர்கள் இடம்பெற்றன
- ஜனவரி 30, 2012 : ரஃபேல் போர் விமானங்களை குறைவான விலையில் தயாரித்து தருவதற்கான முன்மொழிவை பிரான்ஸ் நாட்டின் தாஸால்ட் ஆவியேஷன் நிறுவனம் இந்திய அரசிடம் வழங்கியது.
- மார்ச் 13,2014 : இந்திய பொதுத்துறை நிறுவனமான 'ஹிந்துஸ்தான் ஏரோநாலாட்டிக்ஸ் லிமிடெட் ' மற்றும் தாஸால்ட் நிறுவனங்களுக்கிடையே 108 விமானங்களுக்கான தயாரிப்பு பணிகளை முறையே 70:30 என பிரித்துக் கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 8,2014 : பறக்கும் நிலையில் உள்ள 18 விமானங்களை அடுத்தா 3 அல்லது 4 ஆண்டுகளில் பிரான்ஸ் வழங்கும் என்றும் , அதன் பிறகு 108 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருணஜெட்லீ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
- ஏப்ரல் 10,2015 : பறக்கும் நிலையில் 36 விமானக்கலை மட்டும் நேரடியாக வாங்குவது என ஒப்பந்த முன்வடிவம் மாற்றியமைக்கப்பட்டது.
- ஜனவரி 26,2016 : இந்திய - பிரின்ஸ் அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- டிசம்பர் 31,2016 : தாஸால்ட் நிறுவனம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் , இந்தியாவிற்கு ரூபாய் 58000 கோடியில் 36 போர் விமானகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது மத்திய அரசு கூறியிருந்த முந்தைய விலையை காட்டிலும் இருமடங்கு அதிகம் எனப் புகார் வந்தது.
- செப்டம்பர் 5, 2018: ரஃபேல் ஒப்பந்தம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரிய பொதுனால மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
- அக்டோபர் 10,2018 : ரஃபேல் விமான கொள்முதலுக்கான கொள்கை முடிவு குறித்த விவரங்களை மூடி முத்தியிட்ட உரையில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- அக்டோபர் 24,2018 : முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா ,அருண் சௌத்திரி ,மூத்த வழக்குரைஞர் பிரசாந்தை பூஷன் உள்ளிட்டோர் ,சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தை நாடினர்.
- அக்டோபர் 31,2018:ரஃபேல் போர் விமான விலை குறித்த விவரங்களை 10 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- நவம்பர் 12,2018 : விலை விவரம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
- நவம்பர் 14,2018 : வஹ்ஸ்க்கு விசாரணை முடித்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
- டிசம்பர் 14,2018 : ரஃபேல் விமான கொள்முதலில் சந்தேகம் இல்லை எனக் கூறி அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Click here to join facebook channel
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment