- ஏன் அந்த கருப்பு பெட்டியை அப்படி தேடுகிறார்கள் என்னும் கேள்வி எழுகிறது அல்லவா?
- அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்னும் கேள்வியும் கூடவே பிறக்கிறது அல்லவா?
- அந்த கேள்விகளுக்கான பதிலையும், கருப்புப்பெட்டி விமானத்தில் இடம்பிடித்த வரலாற்றையும் இக்கட்டுரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்வோம்.
- 1934 அக்டோபர் 19 ஒரு வெள்ளிக்கிழமை அன்று வானில் பறந்துகொண்டிருந்த மிஸ் ஹோபர்ட் (Miss Hobart) என்னும் விமானம் என்ன காரணத்தாலோ விபத்துக்குள்ளாகி டாஸ்மேனியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட நீரிணையில் விழுந்து, மாயமாக மறைந்து போனது.
- விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் பயணித்த பயணித்த 8 ஆண்களில் ஒருவர், ஹுபர்ட் வாரன் என்னும் மதபோதகர். சிட்னி நகரை நோக்கியதாக அவரது பயணம் இருந்தது.
- விபத்தில் இறந்த ஹுபர்ட் வாரனின் நான்கு குழந்தைகளில் டேவிட் வாரன் (David Warren) 8 வயதுச் சிறுவன். அவனுக்கு அவனது தந்தை , அந்த கொடூரமான விமானப்பயணத்திற்கு முன்பாக ஒரு 'படிக - ரேடியோவை' (Crystal Radio) பரிசாகக் கொடுத்திருந்தார்.
- டேவிட் வாரன், பள்ளியில் படிக்கும்போது, அந்த ரேடியோ எப்படி வேலை செய்கிறது. என்பதை ஆய்ந்தறிவதிலேயே பெரும்பகுதி நேரத்தை கழித்திருக்கிறான். தொலைக்காட்சிகள் பயன்பாட்டிற்கு வராத, அன்றைய காலகட்டத்தில், கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனைகளை ரேடியோவில் நேரலையாக ஒலிபரப்பு செய்தார்கள். அந்தக் கிரிக்கெட் வர்ணனைகளைத் தனது படிக - ரேடியோவில் கேட்பதற்கு, தனது வகுப்பு தோழர்களிடம் ஆளுக்கு ஒரு 'பென்னி' வசூலித்திருக்கிறான், டேவிட் வாரன்.
- டேவிட் வாரன் தனது இளமைக்காலத்தில் ஒரு மிகச் சிறந்த பேச்சாளராக இருந்திருக்கிறார். அதனால், அவரது தந்தையைப் போல அவரும் ஒரு மதபோதகராக வருவார் என்று அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்திருகின்றனர். ஆனால், டேவிட் வாரன் அறிவியல் மீது அடங்காக் காதல் கொண்டார். 30 வயதுக்குள்ளாகவே அறிவியலில் பட்டமும், வேதியல் முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றார். ராக்கெட் அறிவியல் அவரது சிறப்புத் துறையாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு துறையின் வான் ஆய்வுத்துறையில் (Aeronaut cal Research Department) பணியில் சேர்ந்தார்.
- பிரிட்டனைச் சேர்ந்த முதல் வணிக ஜெட் விமானமான பிரிட்டிஷ் டெ ஹெவிலாண்ட் காமெட் ' (British de Havilland Comet) விபத்துக்குள்ளானது. அந்த விமான விபத்திற்கான காரணம் தெரியாமல் மர்மமாகவே இருந்து வந்தது. அந்த மர்ம முடிச்சை அவிழ்க்கும் பணியில் உதவி செய்ய டேவிட் வாரன், மாற்றுப்பணியில் அனுப்பி வைக்கப்பட்டார்.
- இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற நிலையில், சிட்னி நகரில் நடைபெற்ற பொருட்காட்சி இல், முதன்முதலாக ஜெர்மன் தயாரிப்பான மினி போனைப் (mini phone) பார்த்த டேவிட் தனக்கும் அப்படி ஒன்றை வாங்கவேண்டும் என்றும், அதில் பிரபலமான வூடி ஹெர்மன் (Woody Herman) ஜாஸ் இசையை பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
- அந்த சமயத்தில் உடன் இருந்த ஒரு அறிவியலாளர், காணாமல்போன விமானம் ஏன் கடத்தப்பட்டிருக்கக்கூடாது என்ற சந்தேகத்தை எழுப்பினார். அந்த கணத்தில் தான் டேவிட் வாரனுக்கு அந்த உத்தி மின்னல் போல அவர் மூளையில் தோன்றியது
- அதாவது. விமானிகள் அறையில் ஒரு ஒலிநாடா பதிவியை (Tape-recorder) வைத்து அங்கு நிகழும் அத்தனை உரையாடல் களையும் அதில் பதிவுசெய்தால், விமானம் விபத்துக்குள்ளாகும் போது காரணத்தைக் கண்டறிய முடியம் என்று அவர் கருதினார். அப்படி ஒரு கருத்து தோன்றிய உடன் அதுபற்றிய ஆய்வினை தொடங்க, தனது மேலதிகாரியிடம் அனுமதி கேட்டார் .அனால் அந்த அந்த மேலதிகாரி மறுத்துவிட்டார்.
- சில மாதங்களுக்குப் பிறகு புதியதாக ஒரு மேலதிகாரி பொறுப்பேற்றார். அவரிடம் அனுமதி கேட்டபோது, வெளியில் தெரியாமல் மிகவும் இரகசியமாக ஆய்வினை மேற்கொள்ளுமாறு பணித்தார்
- விமான விபத்துக்கு காரணம் கண்டறியும் 5a (A Devise for Assisting Investigation into Aircraft Accidents) என்னும் தலைப்பில் ஒரு குறிப்பு (report) எழுதி அனுப்பினார். ஆனால் அதற்கு பலமான எதிர்வினை விமான பைலட்டு களிடமிருந்து வந்தது. ஒட்டுக் கேட்கும் கருவியை மடியில் கட்டிக்கொண்டு விமானம் ஓட்ட முடியாது' என்று சொல்லி அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்
- ஆனாலும் டேவிட் வாரன் சோர்ந்து விடாமல், தனது 20 ஆண்டுகால ரேடியோ உதிரிபாகங்களைக் கொண்டு, இரகசியமாக ஒரு ஒலிப்பதிவுக் கருவி வடிவமைத்து விட்டார்
- ஒரு நாள், தனது மேலதிகாரியைப் பார்க்க பிரிட்டனிலிருந்து ஒரு முக்கிய பிரமுகர் வந்திருந்தார். அவரிடம், தனது ஒலிப்பதிவுக் கருவியைப்பற்றி விளக்குமாறு டேவிட்டின் மேலதிகாரி கூறினார். டேவிட் வாரனின் விளக்கத்தை கேட்ட அந்த பிரிட்டன் பிரமுகர் உடனடியாக டேவிட் வாரணை இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்குமாறு மேலதிகாரியிடம் கூறினார்
- இந்த நிகழ்வு, 'கருப்புப்பெட்டி' வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லவேண்டும். இங்கிலாந்து செல்லும் கூரியர் (Courier) என்னும் குண்டு வீசும் விமானத்தில், டேவிட் வாரன் பயணம் செய்தார். அந்த முக்கியப் பிரமுகர் பிரிட்டன் ஆகாயவிமானம் கழகத்தின் செயலாளர், ராபர்ட் ஹார்டிங் காம் (Robert Hardingham Secretary of the Air Registration Board) என்னும் உண்மை பின்னர்தான் டேவிட் வாரனுக்குத் தெரியவந்தது
- உலக வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் எத்தனையோ தற்செயல் நிகழ்வுகளில் ஒன்று,அந்த விமானப் பயணத்தில் நிகழ்ந்தது. விமானத்தின் இரண்டு எஞ்சின்களில் ஒன்று பழுதாகி முடங்கி விட்டது. அதனால், விபத்து ஏற்படும் சூழல் உருவானது. பயணத்தைத் தொடர்வதா அல்லது திரும்பி விட்டதா என்று யோசித்து, கடைசியில் ஒரு எஞ்சினுடன் பயணத்தைத் தொடர்வது என்னும் முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்
- டேவிட் வாரனுக்கு அது ஒரு வாய்ப்பு அமைந்தது. உடனடியாக தனது, டேப்ரெக்கார்டர், மீது விமானப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை உரையாடல் களையும் பதிவு செய்தார். ஒருவேளை அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அவர்கள் அனைவரும் இறக்க நேரிடுமானால், என்ன நடந்தது என்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதே அவரது நோக்கம் ஆனாலும், அந்த விமானப் பயணம் நல்லபடியாக முடிந்தது
- இங்கிலாந்தில், தனது ஒலிப்பதிவுக் கருவி பற்றி விளக்கமளித்தல் முடித்ததும், அங்கு இருந்த ஒரு பத்திரிகையாளர், அதனைக் கருப்புப்பெட்டி' என்று அழைத்தார். காரணம் அது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அறிவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு குறியீட்டு சொல்.
- கருப்பு பெட்டி என்று அழைக்கப்படும் அந்த சாதனம். உண்மையில் ஆரஞ்சு வண்ணம் பூசப்பட்டது. விமானம் விபத்துக்குள்ளாகும் போது எளிதில் கண்டறிவதற்காக ஆரஞ்சு வண்ணம் பூசப்படுகிறது. ஆனாலும், கருப்புப் பெட்டி என்னும் சொல்லே வரலாற்றில் நிலைத்துவிட்டது. அன்று முதல் இன்று வரை 'கருப்புப் பெட்டி ஆரஞ்சு வண்ணமுடைய தாகவே இருக்கிறது.)
- 1960 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய அரசு முதன் முதலாக, வணிக விமானங்களில், விமானிகள் அறையில் கருப்புப்பெட்டி பொருத்துவதைச் சட்டமாக்கியது. இன்று அனைத்து நாடுகளின் விமானங்களிலும் கருப்பு பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.
- அது மாத்திரமல்ல. இன்றைய கருப்புப்பெட்டிகள் உடைந்து போகாதே வகையில், உறுதியான உருக்கில் (steel). நெருப்பில் அழியாமலும் (Fire-proof) நீரில் கரையாமலும் (water-proof) உருவாக்கப்படுகின்றன
- இன்றைய கருப்புப்பெட்டி விமானிகள் அறையில் நிகழும் உரையாடல்களைப் பதிவு செய்யவும். விமானம் இயக்கத்தில் இருக்கும் போது பல்வேறு பாகங்களிலிருந்து திரட்டப்படும் தரவுகளைப் பதிவு செய்யவும் என இரண்டு கருவிகளின் ஒருங்கிணைந்த அமைப்பாகும்.
- விமான விபத்துகள் போது, பெரும்பாலும் விமானத்தின் தலைப்பகுதியே முதலில் தரையை அடைந்து நொறுங்கி விடுகிறது. அதன் வால் பகுதி அதிகம் பாதிப்படைவ தில்லை. எனவே, கருப்பு பெட்டியின் பாதுகாப்பை முன்னிட்டு அது விமானத்தின் வால்பகுதியிலேயே பொருத்தப்படுகிறது.
- ஆஸ்திரேலிய அரசு, ஜூன் 2012-இல், ஒரு சாலைக்கு, டேவிட் வாரன் சாலை என்று பெயர்சூட்டி, அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது. ஆகாயவிமான வரலாற்றில் டேவிட் வாரன் பெயரும் அழியாமல் நிலைபெற்றுவிட்டது
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு (11th new book full possible questions) Click here
To download நடப்பு நிகழ்வுகள் 10.1.2019 - 12.1.2019 Click here
நடப்பு நிகழ்வுகள் 7.1.2019 - 9.1.2019 Click here
11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here
Click here to join facebook channel
To view the பாரதியார் பற்றிய சில தகவல்கள் (Details about Bharathiyar) Click here
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here
No comments:
Post a Comment
Thank you for your valuable comment